in ,

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்தளை மாவட்ட நிலவரம்

மாத்தளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த இரு தினங்களாக பரவலாக பரவி வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் 147 புதிய நோயாளர்கள் மாத்தளை, நாஉல, தம்புள்ளை, கலேவெலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து உடன் அமுழுக்கு வரும் வகையில் மாத்தளை, தம்புள்ளை, கலேவலை, நாஉல ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுழ் படுத்தப்பட்டுள்ளது என இராணவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். பொதுமக்கள் அவதானமாகவும், பொறுப்புணர்வோடும் சுகாதார கட்டுப்பாடுகளை கடைபிடித்தும் செயற்படுமாறு பொலிசார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். -அஸீம் இக்பால்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மே முதலாம் வாரத்திலிருந்து தொடர்கிறது இடைக்காலத் தடை

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்…