in ,

அடு்த்த வைரஸினால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம்

சிறுவர்களுக்கிடையில் புதியதோர் வைரஸ் தொற்று பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய்ப் பிரிவின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோயானது மிக விரைவாக பரவுவதாகவும் 6 வயதுக்குக் குறைந்த சிறுவர்களிடம் பரவக் கூடியது எனவும் வாய்க்குள்ளும், உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் இந்த வைரஸுக்கான பிரதான அறிகுறியாகும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார். காய்ச்சல் ஏற்படுவது, உணவு உட்கொள்வதில் சிரமம் போன்ற நிலைமைகளும் சிறுவர்களுக்கு ஏற்படலாம் என்றும், இவ்வறிகுறிகளுடன் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற அதிகளவிளான சிறுவர்கள் வருவதாகவும் வைத்தியர் மேலும் கூறினார். இந் நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத பட்சத்தில் சிறுவர்களின் நகங்களும் உதிரக் கூடுமென அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. (HN) -இஷாதா ஸப்வான் பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

புலமைப் பரிசில் பரீட்சை மீள்மதிப்பீடு பெறுபேறுகள் வெளியாகின

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நடக்கவிருப்பது??