in ,

முன்னாள் பொலிஸ்மா அதிபர் காலமானார்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது 68ஆவது வயதில் காலமானார். அவர் நேற்று 2021. 04.29 கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவரது இறதிச்சடங்கு நாளை 2021. 05.01 நடைபெறும். இலங்கையின் 32ஆவது பொலிஸ்மா அதிபரான இவர் 119 என்ற அவசரகால இலக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார். 1978 ல் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர் 2010 மற்றும் 2011க்கு இடைப்பட்ட காலத்தில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியுள்ளார். பிரேஸில் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவராகவும் ,2014ஆம் ஆண்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகத்தின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(VKN) -சமூன் பாதிமா பஸ்னா. கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஊர்வலத்திற்கு இடையூறு செய்த நபர் கைது

ஜனாதிபதி எழுதிய கடிதம்