in ,

மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட இன்னும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டின் 03 மாவட்டங்களில் 05 பொலிஸ் பிரிவும் 03 கிராம சேவகர் பிரிவுகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உடன் அமுலாகும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்தாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார் . மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, கலேவெல , மாத்தளை , நாவுல ஆகிய பொலிஸ் அதிகாரப் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தின் பன்னல பொலிஸ் அதிகாரப் பிரிவு மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவக பிரிவுகள் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டு பொலிஸ் பிரிவில் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இரானுவத்தளபதி மேலும் தெரிவித்தார். (VKN) -மாஹிரா மனாப், கடுகஸ்தோட்டை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மூன்றாவது நாளாகவும் அதிகரிப்பு தொடர்கிறது

ஊர்வலத்திற்கு இடையூறு செய்த நபர் கைது