சகல பள்ளிவாசல்களிலும் இன்று முதல் தராவிஹ், ஜும்மா தொழுகை, மற்றும் பயான்கள் கியாமுல் லைல், இஹ்திகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரப் இன்று 2021.04.29 சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயை இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதேவேளை ஐந்து நேரத் தொழுகைக்கு ஆகக்கூடியது 25 பேர் வரை முழுமையான சுகாதார நடைமுறைகளைப் பேணி உள்வாங்கப் படலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.