in ,

ஒரு வாரத்திற்குள் உயர்தரப் பெறுபேறுகள்??

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருதிற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீணடும் திறப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மே மாதம் 10ஆம் திகதி அளவிலா திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வார காலத்திற்கள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுன காரியலயத்தில் (2021.04.28) நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செயற்பாட்டு பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவர்கள் கொவிட்19 தொற்றுக்கள்ளாகியுள்ளதால் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல்கலைககழகத்திற்குச் செல்ல தகுதியுள்ள மாணவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(VKN) -சமூன் பாதிமா பஸ்னா. கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் சிலவற்றின் விபரங்கள்

மேல் மாகாணத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ள உள்ளவர்களுக்கான அறிவித்தல்