in ,

கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்

பன்விலை, மாவுசா பிரசேத்தில் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 24 ம் திகதி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வேளையிலேயே 03 பிள்ளைகளின் தந்தையாகிய குறித்த நபர் மரணமடைந்துள்ளார். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சடலம் என இனங்காணப்பட்டது. இந் நிலையில் குறித்த நபரோடு தொடர்பில் இருந்த மூன்று வீடுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.

இதேவேளை குறித்த பிரதேசம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு பன்வில பொலிஸார் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. -ஏ.ஆர். பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

“பீல்ட் கேம் செம்பியன்” கரப்பாந்தட்டப் போட்டி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் சிலவற்றின் விபரங்கள்