in ,

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் நடப்பது இதுதான்

தற்போதைய கொவிட் 19 காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3900 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 145 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் களுத்துறை, மொனராகலை, மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறு கொவிட் 19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் அதிகரிக்கும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு

நாட்டில் பரவும் கொரோனா தொடர்பான பரிசோதனை முடிவுகள்