in ,

தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவயில் வெளியேறும் பகுதி இன்று 2021.04.28 காலை 6 மணி முதல் மீள் அறிவித்தல் வரும் வரை மூடப்படுகிறது. குறித்த பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அம்பியூலன்ஸ் மற்றும் பஸ்கள் குறித்த வெளியேற்றத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை உபயோகிப்போர் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ ஆகிய பகுதிகளில் உள்ள வெளியேற்றத்தை பயன் படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதவேளை கொட்டாவ ஊடாக வாகனங்கள் உள் நுழைய முடியும் எனவும் குறித்த பகுதியில் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (VKN) -சமூன் பாதிமா பஸ்னா, கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் நடப்பது இதுதான்