in ,

தொடர் குடியிருப்பொன்றில் தீ விபத்து, இராகலையில் சம்பவம்

இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொடர்குடியிருப்பொன்றில் இன்று (திங்கட்கிழமை 26.04.21) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதியில் 9ஆவது இலக்க தொடர்குடியிருப்பிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த தீ விபத்தில் வீடுகளில் தங்கியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் பாரிய அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.(TJN) -ஸாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

யாழ்ப்பாணத்தில் விபத்து, படையினர் காயம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுக்கும் அறிவிப்பு