in ,

திடீர் வெடிப்புச் சம்பவம், நடந்தது இது தான்…

குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ, பன்னல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(24) இரவு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பட்டாசுகளில் இருந்து அகற்றப்பட்ட வெடிமருந்துகள் இரும்புக் குழாயில் வைக்கப்பட்டபோது அவை மின் குழாயுடன் தொடர்புற்றமையினாலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (CTN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொள்ளவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஸ்பூட்னிக் -வி தடுப்பூசிகள் விரைவில் இலங்கையில் அறிமுகம்

அரச, தனியார் விழாக்களை ஒத்தி வைக்க தீர்மானம்