Local News

கர்ப்பிணிப் பெண்ணின் இறப்பு தொடர்பில் சந்தேகம்

கடந்த 17 ம் திகதி எரி காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 08 மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உடுப்பிடியைச் சேர்ந்த சிந்துஜன் ரசிக்கா எனும் 19 வயதுப் பெண்ணே இந்த சம்பவத்தி்ல் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம்குமார் கருத்து தெரிவிக்கையில் கர்ப்பிணிப் பெண் தன்னைத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திக் கொண்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டாலும் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக எண்ணி குறித்த பெண்ணின் கணவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வேண்டியுள்ளார். (ADN) -அஹமட், மாவனல்லை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button