in ,

ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் பலி, டெல்லியில் சம்பவம்.

டெல்லியில் கொரோனா நோயாளர்களுக்கான ஒக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக உருமாறி தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்ஸிஜன் தட்டுப்பாடு பெரும் தலையிடியாக மாறியுள்ளது. டெல்லியில் ஒக்ஸிஜன் குறைபாடு உள்ள நிலையில் அதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 200 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டு இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(TJN) -ஸாமில் சியாத், ஹன்தெஸ்ஸ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மலேரியா அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு