in

மலேரியா அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை

வெளிநாட்டில் வசித்து வரும் இலங்கையர் நாடு திரும்புவதால் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். “சமீபத்தில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களில் மலேரியாவை ஏற்படுத்தும் மலேரியா நுளம்பு கண்டறியப்பட்டது” என டாக்டர் அனுலா விஜேசுந்தர செய்தியாளர்களிடம் தெறிவித்தார். “வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவர்கள் வெளிநாட்டில் இருந்ததை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்” என சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் தெரிவித்துள்ளார். மலேரியா தொற்று என சந்தேகிக்கப்படுமிடத்து தனிப்பட்ட இரத்தப் பரிசோதனை மூலமே உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(NFT) -அஸ்மியா ஷரீப், இகிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள குற்றச்சாட்டு

ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் பலி, டெல்லியில் சம்பவம்.