Local News

கைதிகளைப் பார்வையிட நாளை முதல் தடை.

இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதனை கட்டுப்படுத்துவதற்காகன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை பார்வையிட வருவதையும் தடை செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (24) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (ADN) -அஹமட், மாவனல்லை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button