in ,

உயர் தர பரீட்சை முடிவுகள் அடுத்த வாரத்திற்குள்.

2020 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகளை தயாரிக்கும் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என பரீட்சை ஆணையாளர் ஜெனரல் சனத் டீ பூஜித தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் திருத்தப்பணிகளின் இரண்டாம் கட்டத்தை இந்த மாதம் 27 ஆம் திகதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (CTN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மீளமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று மீள் திறப்பு.

11 மாணவர்கள் தொடர்பில் பொன்சேகா பரபரப்புத் தகவல்.