மீளமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று மீள் திறப்பு.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை பல்கலைக்கழக மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 08 ம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இந்த நினைவுத் தூபி தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட அழுத்தங்களின் காரணமாக தகர்க்கப்பட்ட இடத்திலேயே நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இணங்கியது. கடந்த ஜனவரி மாதம் 11 ம் திகதி இந்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் பல்கலைக்கழக உபவேந்தரின் அனுமதிக்கமைய இடம்பெற்ற நிலையிலேயே இன்றைய தினம் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. (HN) பஸ்மினா, மடுல்கெல