in ,

55 ஆயிரம் நோயாளர்களை அண்மிக்கும் கொரோனா தொற்று – 20.01.2021

 

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும், போலந்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 9 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 561 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 774 பேர் குணமடைந்து நேற்று  வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 ஆயிரத்து 552 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கேகாலை – அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆணொருவர் மாவனெல்ல வைத்தியசாலையிலிருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு – 06 பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-Capital News-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

“5 Different Look Challenge” எனும் Hashtag ற்கு நீங்களும் அடிமையா?

கல்விப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மர்ஹூம் வை. எல். எம். ராஸிக்