in ,

“5 Different Look Challenge” எனும் Hashtag ற்கு நீங்களும் அடிமையா?

 ‘5 Different Look Challenge’ இப்படி ஒரு Hashtag வலம் வருவதை கண்ணுற்றேன். இங்கே ஒரு குறிப்பிட்ட நபர் அவருடைய 5 விதமான நிழற்படங்களை ஒருசேர பேஸ்புக்கில் பகிர்வது நடக்கிறது. இங்கு இருக்கின்ற அவதானத்தை யாரும் சிந்திப்பது கிடையாது. இதில் அதிகம் பங்கு கொள்வது இளைஞர்களே. எனவே, இதன் பின்னால் என்ன என்ன வினைகள் இருக்கலாம் என்பதை சற்று சிந்தித்து நடந்து கொள்வது அவசியம்.

எதிர் கால மெய் உலகில் (Real World) வாழும் சகலரது தகவல்களையும் மெய்நிகர் வெளியில் (Virtual World) சேகரிப்பதன் மூலம் அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பல உபாயங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. அதாவது, எதிர்கால உலகம் என்பது தகவல் முதலாளியம் (Information Capitalism) சார்ந்ததாகவே இருக்கப்போகிறது. அதிக தகவல்களை வைத்திருப்பவனே ஆட்சி செய்வான். உலகு தற்போது கூட இப்படித் தான் இயக்குவிக்கப்படுகிறது. இது குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்.

‘Face Recognition’ நுட்ப முறை மூலம் குறிப்பிட்ட மனிதனின் முகத்தோற்றம் சேமிக்கப்படுகிறது. இதனை கடந்த காலங்களில் நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒரு குழுவினருடன் இருக்கும் நிழற்படத்தை பதிவிட்டால் உங்கள் முகம் அல்லாத ஏனையவர்களது முகங்களில் சதுரவடிவ கட்டங்கள் வருவதையும் அதன்மேல் குறித்த நபர்களின் பெயர்கள் காண்பிக்கப்படுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது எப்படி உடனே நடைபெறுகிறது? காரணம், இது தானியங்கு முறையில் நிகழ்கிறது. பின், Face Detection முறையில் உங்களது எண்ம வடிவ அடையாளம் வரையப்படுகிறது.

இதன் வளர்ச்சியாக, இப்போது உங்கள் முழுப் புறத்தோற்றமும் பதிவு செய்யப்படுகிறது. அதற்கான அடித்தளத்தையே நீங்கள் இப்படியான சமூக சவால்கள் மூலம் வசதிப் படுத்திக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எந்த வித தோற்றத்தில் இருந்தாலும் உங்களை அடையாளம் காண முடியும் என்பதற்கான தகவல்களை இந்த, மேற்கூறியது போன்ற சவால்கள் மூலம் மெய்நிகர் உலகுக்கு வழங்குகிறீர்கள். இங்கு AI தொழில்நுட்பம் மூலம் அவை தானியங்கி, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி விடும்.

அது மாத்திரமின்றி உங்கள் முக ஏற்ற இறக்கங்கள் எல்லாம் குறித்துக் கொள்வது கொண்டு உங்களை Deep Fake முறை மூலம் முப்பரிமாண காணொளியாகக் கூட வரைய முடியும். இப்படி அதிக பிரபலம் வாய்ந்தவர்களை வரைந்து, காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னர் புகைப்படங்கள் மாத்திரமே ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. இன்று இது வளர்ந்து காணொளியையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. சினிமாவாக VFX முறையில் இப்படி உருவாக்கப்பட்ட பல படங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது இன்னொரு வகை.

எனவே, உங்களது நிழற் படங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றுவது என்பது நீங்கள் உங்களது புறத்தோற்ற அடையாளத்தை மெய்நிகர் உலகில் தகவல் திரட்டுவோருக்கு இலவசமாக வழங்குகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு முன்னர் அதிக நிழற்படங்களை நாம் பதிவேற்றி இருப்போம். அவை குறித்து நாம் அதிகம் சிந்தித்திருக்க மாட்டோம். விடுங்கள். மேற்சொன்ன சவாலை எடுப்போம்.

இங்கு ஒரு குறிப்பிட்ட Hashtag இற்கு கீழ் ஒவ்வொரு நபரும் ஐந்தைத்து நிழற்படங்களை பகிர்கிறார்கள். இங்கு குறித்த இந்த Hashtag இனை வைத்தே உலகில் உள்ள பலரது புகைப்படங்களை Filter செய்து திரட்டிக் கொள்ள முடியும். ஒருவரின் ஐந்து புகைப்படங்கள் இப்போது ஒரே Filter இல் கிடைத்து விடும். இப்படி காலத்திற்கு காலம் குறுகிய காலத்துக்குள் பல இலட்சம் பேருடைய புறத்தோற்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எனவே, நாம் எமது புறத்தோற்ற அடையாளங்களை சமூக ஊடகங்களில் பகிர்கின்ற விடயத்தில் சற்று சிந்தித்து நடந்து கொள்வது அவசியமாகும். 

இஸ்பஹான் சாப்தீன்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கை ஊடகத்துறைக்கு ஒரு சாதனைப் பெயர் கலாநிதி MC ரஸ்மின்.

55 ஆயிரம் நோயாளர்களை அண்மிக்கும் கொரோனா தொற்று – 20.01.2021