ஹொரவப்பொத்தான, கிவுலேக்கட பகுதியைப் பிறப்பிடப்பிடமாகக் கொண்ட MC ரஸ்மின் தன்னுடைய உயர் தரக் கல்வியை கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் கற்றார். பாடசாலைக் காலங்களிலிருந்தே ஊடகத்துறையிலா ஈடுபாடு காட்டிய இவர் இன்றுகளில் கலாநிதிப் பட்டம் பெற்றது இலங்கையின் ஊடகத்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
கலாநிதி எம்.ஸி.றஸ்மின் பேராதனைப் பல்கலைக்கலகத்தில் தமிழ் துறையில் விஷேட பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கையை அபிவிருத்திக்கான தொடர்பாடல் துறையில் பூர்த்தி செய்தவர். நவீன ஊடகம் தொடர்பான பட்டப்பின்படிப்புக் கற்கையை ஒஸ்லோ பல்கலைக்கலகத்தில் பூர்த்தி செய்துள்ளார். “நாளையும் மற்றொரு நாள்” (கவிதை 2008), “முன்மாதிரி சின்னவனும் நண்பர்களும்” இளைஞர் நாவல் (2008), (இளைஞர் நாவல் 2009), “ஊரடங்குச் சட்டம்” (சிறு கதை 2009) உள்ளிட்ட 8 நூல்களை சிங்களத்திலிருந்து மொழி பெயர்த்துத் தந்துள்ளார். “சிங்கள இலக்கியங்கள் ஓர் பன்மைத்துவ ஆய்வு” (1983-2007) 2013 ஆம் ஆண்டு வெளியிட்டார். சில ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். அபிவிருத்திக்கான ஒளிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒளிபரப்பு, ஒளிபரப்பு மொழியியல் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறார். “சமூக வானொலி-மனித வலுவாக்கத்திற்கான ஊடகம்” (2012) என்ற தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார்.150 ற்கும் அதிகமான நாடகங்களை எழுதியுள்ளார். பல நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் சர்வதேச ரீதியாக வானொலி நாடகம் மற்றும் அது சார்ந்த துறையில் வளவாளராக செயற்படுகிறார்.
இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் ஆரம்ப நிலையில் பணியாற்றி பின்னர் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி பின்னர் IREX சர்வதேச ஊடக ஆராய்ச்சி பரிவர்தனை நிறுவகத்தில் இலங்கைக்கான பிரதிப் பிரதம தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தில் இவ்வருடம் (2020) தனது சிறப்புத்துறையான ஊடகத்துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளார்.
Copied MHM Najath