அக்குறணை தெழும்புகஹவத்தை மாதிரி ஆரம்ப பாடசாலையின் 2020 ஆம் ஆண்டின் சிறுவர் தின நிகழ்வுகள் அண்மையில் (02.10.2020) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது .
இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் ஜனாப் எஸ். எச். எம். ரியால்தீன் அவர்களின் தலைமையில் சுமார் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு அன்பளிப்புக்களும், விருந்துபசாரமும் வழங்கி மகிழ்விக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நிகழ்விற்கு அதிபர், ஆசிரிய ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் தங்களது பங்களிப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ. எல். எப் ஸூமையா, அக்குறணை.