அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலையில் 2020 ஆம் ஆண்டின் சிறுவர் தின நிகழ்வுகள் அண்மையில் (02.10.2020) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு கெளரவ அதிபர் ஜனாப் எஸ் . ஏ . எப் ஜிம்னாஸ் அவர்களால் “சிறுவர் தின வாழ்த்து அட்டை” வழங்கி மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். அத்தோடு ஏனைய ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
காலை 8.00 மணியளவில் அதிபரின் உரையோடு நிகழ்வுகள் ஆரப்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து தத்தமது வகுப்றையில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு மாணவர்களுக்கான அன்பளிப்பும், இனிப்பண்டங்களும் வழங்கி மாணவர்கள் சந்தோசப்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏ . எல். எப் ஸூமையா, அக்குறணை.