Local News

கம்பளை வைத்தியசாலைக்கு ஒலிபெருக்கி வசதி

கண்டி மாவட்ட, கம்பளை பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள கொவிட் 19 சிகிச்சை பிரிவுக்கு ஒலிபெருக்கி கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது. உடுநுவர, வஹங்கொஹ ஜனாஸா நலன்புரி அமைப்பின் மூலம் கம்பளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான டாக்டர் நசீம், மற்றும் அய்யூப், ஸியாத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஒலி பெருக்கி கருவி அன்பளிப்புச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் முக்கிய தருணத்தில் தேவையாக இருந்த இவ் உபகரணத்தை வழங்கியமைக்கு வைத்தியசாலை நிர்வாகம் வஹங்கொஹ ஜனாஸா நலன்புரி சங்கத்துக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஸாமில் ஸியாத்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button