அநுராதபுரம், கெக்கிராவ, கொல்லங்குடிகம முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பம் செய்யப்பட்டன.
க.பொ.த. சாதாரண தரத்தில் 12 மாணவர்களும், தரம் ஐந்தில் 19 மாணவர்களும், தங்களது கல்வி நடவடிக்கைகளை பாடசாலையில் ஆரம்பம் செய்தனர்.
சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கேற்ப மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை அதிபர் எச்.எம். சமீன் தெரிவித்தார்.
இதேவேளை மாணவர்களது பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு விஜயம் செய்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவர்கள் தங்களது சமூக இடைவெளிகளை முறையாகப் பேணுவதோடு, சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் J. M. ஹபீப் தெரிவித்தார்.
J. M. ஹபீப்,
கனேவெல்பொல.
2020.07.08