in

நேரியகுளம், மஹாசியம்பளாகஸ்கட அல் அக்ஸா பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் செய்யப்பட்டன.

அநராதபுரம் மாவட்டம், நேரியகுளம், மஹாசியம்பளாகஸ்கட அல் அக்ஸா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை (2020.07.06) ஆரம்பம் செய்யப்பட்டது. சுமார் 20 மாணவர்களைக் கொண்டு முதல் கட்டமாக தரம் ஐந்து வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் முறையாக பின்பற்றப்பட்டு, சுகாதார அறிவுறுத்தல்கள் பேணப்பட்டு முறையான சமூக இடைவெளிகளை கடைபிடித்து கல்வி நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பாடசாலை அதிபர் அல்ஹாஜ் A. M. முபார்தீன் தகவல் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்:
ஹுஸைன் முஹமட் வஸீம்
மஹாசியம்பளாகஸ்கட.
(2020.07.07)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கடலை, சிறிய விளையாட்டு உருண்டைகள் உங்களது பிள்ளைகளின் தொண்டையில் சிக்கினால்…

அநுராதபுரம், கொல்லங்குட்டிகம முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின…