in ,

அக்குறணை மஸ்ஜிதுல் அஹ்ஸன் பள்ளிவாசலின் கல்விசார் நடவடிக்கை.

அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான பொதுக்கூட்டம் இன்று (2020.07.04) சனிக்கிழமை இடம்பெற்றது.

அக்குறணை, புளூகொஹொதென்ன மஸ்ஜிதுல் அஹ்ஸன் பள்ளி வாசல் நிர்வாகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷேக் கலாநிதி S. M. M. மஸாஹிர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அக்குறணை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி கற்று சமூகத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டிருக்கக்கூடிய சிலர் தெரிவு செய்யப்பட்டு அழைப்பு விடுத்து அவர்களுக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அக்குறணை ஸாஹிராக் கல்லூரியின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அதிகமான கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வில் அ.இ.ஜ.உ. அக்குறணை கிளைத் தலைவர் அஷ்ஷேக் சியாம் யூசுபி, திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளர் S. H. M. சபீக், பிரதிக் கல்விப் பணிப்பாளர் I. ஹாசிம், கலேவெல கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் S. H. M. பாரிஸ், ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் A. S. M. இர்ஷாத், ஸாஹிராக் கல்லூரியின் தற்போதைய அதிபர் S. முஹாஜிரீன், பிரதி அதிபர் S. M. M. ரிழ்வான், அமானா வங்கியின் அக்குறணை கிளை முகாமையாளர் S. H. M. மின்சார், பழைய மாணவர் சங்க உறுப்பினர் M. S. M. நளீர், பழைய மாணவர் சங்க பிரதித்தலைவர் M. B. B. ஸமான், பழைய மாணவர் சங்க செயலாளர் M. A. M. அன்பாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் M. M. M. பௌஸர், பா.அ.ச. உறுப்பினர் S. H. I. M. லாபிர், பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் நிஸாஹிர், அல்ஹாஜ் இஸ்திஹார், அல்ஹாஜ் நளீம், அல்ஹாஜ் அன்வர், அல்ஹாஜ் கலீல், அல்ஹாஜ் ஹில்மி, அல்ஹாஜ் மபாஸ், அல்ஹாஜ் எம்ஸிதீன், அல்ஹாஜ் ஷாபி, முன்னாள் ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் M. R. அலி ரிஷாப், பள்ளி நிர்வாக சபை செயலாளர் S. M. அன்வர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முழுமையாக அக்குறணை ஸாஹிராக் கல்லூரியின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதோடு நிகழ்வை ஏற்பாடு செய்த புளூகொஹொதென்ன மஸ்ஜிதுல் அஹ்ஸன் பள்ளி நிர்வாகம் தொடர்ச்சியாக தன்னாலான பங்களிப்பை இந்தப் பாடசாலைக்கு வழங்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

காலை 09.00 மணிக்கு அக்குறணை ரஹ்மானியாஹ் அரபுக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் ரிபாய் மௌலவியின் கிராஅத்தோடு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணியளவில் ஸலவாத்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்வுக்கு “பிறைநிலா” ஊடக வலையமைப்பு முழுமையான ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சப்ராஸ் அபூபக்கர்
ஊடகவியலாளன்,
2020.07.04

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அக்குறணை வேகப்புறா கழகத்தின் பரிசளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.

கடலை, சிறிய விளையாட்டு உருண்டைகள் உங்களது பிள்ளைகளின் தொண்டையில் சிக்கினால்…