in ,

அக்குறணை வேகப்புறா கழகத்தின் பரிசளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.

அக்குரணை வேகப் புறா கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Northern Riders, Battle of CIK போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (2020.06.28) அக்குரணை Kings Court மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களும், கௌரவ அதிதியாக அலவத்துகொடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ். ஏக்கநாயக்க இளங்கசிங்க அவர்களும், சிறப்பு அதிதியாக அகில இலங்கை வேகப் புறா சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம். அஜ்மீர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இப்போட்டியானது அக்குறணை, திகன, மடவளை, மாத்தளை, கலேவெல, கம்பளை, வெலம்பொடை, நாவலபிடிய, மாவனல்லை உள்ளடங்களாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 10 கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது. இதில் அக்குறணையை சேர்ந்த M.T.M. Ismail (Chooty) முதலிடத்தையும், இரண்டாமிடத்தை அக்குரணையை சேர்ந்த M.S. Al Thamish அவர்களும், மூன்றாம் இடத்தை அக்குறணையை சேர்ந்த M.T.M. Ismail (Chooty) அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

இப் பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்கு மொத்தமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: ரிமாஸ் கான் நலீர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

“சுடர் ஔி” யின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்திகள்

அக்குறணை மஸ்ஜிதுல் அஹ்ஸன் பள்ளிவாசலின் கல்விசார் நடவடிக்கை.