தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் அடுத்த தவனைக்கான கட்டணத்தையும் கட்டுமாறு பல இன்டர்நெஷனல் கல்லூரிகள் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் முதல் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் பெற்றோர்கள் ..சாப்பிடவே கஷ்டப்படும் வேளையில் பல கல்லூரிகள் தவனைக்கான கட்டணத்தை செலுத்த சொல்லி வற்புறுத்தி வருகின்றன.
மே மாதம் 30 ஆம் திகதிக்குள் கட்டணத்தை செலுத்தா விடின் தண்டபணம் அறவிடப்படும் என அச்சுறுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் 31 ல் இருந்து ஜீன் மாதம் 15 ஆம் திகதிக்குள் கட்டினால் 5 % வீதம் அபரதமும் அதற்கு பின்னால் செலுத்தப்பட்டால் 15% அபரதாமும் அறவிடப்படுமாம்.
கடவுளே கொரோனாவை விட கொடுமையப்பா இது..
வாடகையை மனிதாபிமான ரீதியில் குறைக்க சொன்ன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கு என்ன செய்ய போகுது என்று பார்ப்போம்.
பாடசாலைகளுக்கு மானிய தொகையை அரசாங்கம் வழங்கினால் ஆசிரியர்களுக்கு தேவையான ஊதியத்தை வழங்க முடியும் அதேபோன்று கற்கும் மாணவர்களின் பெற்றோர்களும் உங்களை மறக்க மாட்டார்கள்….
ஆக்கம்: Dunstan Mani