in ,

ஊரடங்குச் சட்டம்: புதிய அறிவித்தல் வெளியானது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்று முன்னர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே  கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டமானது நாளைக் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டமானது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கபபட்டுள்ளது.

-கபிடல் செய்தி-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

முதியோர்களும், சிறியவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே…

புத்தளம் அல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும், உண்மை நிலையும்….