இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் மூன்றாவது சரத்தின் கீழ், குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம், கடந்த 19 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்றைய தினம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தமிழ் -சிங்களப் புத்தாண்டு காலப்பகுதி நிறைவடைந்ததன் பின்னரே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் அது குறித்து ஆராய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது சமூக வலைத்தளப்பக்கத்தின் ஊடாக இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைளை இடைநிறுத்தி, கொவிட் 19 தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயத்தை கருத்திற் கொண்டு செயற்படுமாறு, சகல அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
-கபிடல் செய்தி-
Masha allah