in

கொரோனாவால் இரண்டு உயிரிழப்புகள் சிங்கப்பூரில் இன்று பதிவு.

கொரோனாவின் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் இன்றைய தினம்  முதன்முதலாக இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, 75 வயதுடைய சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும், 64 வயதையுடைய இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனாவின் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 131 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, 252 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர்களில்  இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

-Capital News-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஹட்டனில் உள்ள 76 பேர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.