மக்கள் மத்தியில் தேவையற்ற தவறான தகவல்களை வழங்காதீர்கள், – பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை
பாதுகாப்புச் செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
COVID-19 என கூறப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏனெனில் புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தகைய பொறுப்பற்ற தகவல்களை பரப்பும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களை, தங்களது வீடுகளிலேயே இருக்குமாறும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
-கபிடல் செய்தி-