Local News
அக்குறணை, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிடிய பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ் மொழி மூல பயிற்சிப்பட்டறை 2020
உலக வங்கியின் அனுசரணையுடன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சிப்பட்டறை ஒன்று கடந்த 11.03.2020 புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (17.03.2020) செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது.
இப்பயிற்சிப்பட்டறையானது அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி எம்.எச். இந்திக குமாரி அபேசிங்க மற்றும் சிறுவர் செயலக பயிற்சி நிபுணர் (கொழும்பு) ஜனாப் எம்.எம். ஜிப்ரி, அக்குறணை முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நதீகா ஷாமிலி ஆகியோரின் தலைமையில் அக்குறணை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் விரிவுரையாளர்களாக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் (மட்டக்களப்பு) ஜனாப் எம்.எம். ஸர்ஜுன், உளவளத்துறை ஆலோசகர் ஜனாப் எம்.டி.எம். இயாஸ், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் (கண்டி) திருமதி. விஜயதர்ஷனி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸாமியா ஹலீம்தீன், அக்குறணை-