” தெழும்புகஹவத்தை மாதிரி ஆரம்ப பாடசாலையின் ” 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை 2020. 03. 03 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுகள் அதிபர் ஜனாப் எஸ் . எச். எம் ரியால்தீன் அவர்களின் தலைமையில் 02.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வில்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக அல்ஹாஜ் இஸ்திஹார் இமாமுத்தீன் (அக்குறணை பிரதேச சபைத் தலைவர்) அவர்களும் , கௌரவ அதிதியாக ஜனாப் எம். எஸ். எம் ராஸிக் ( கடுகஸ்தோட்ட வலய – ( தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான ) உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் , விஷேட அதிதிகளாக ( பிரதேச சபை உறுப்பினர்கள் ) அல்ஹாஜ் ஏ .எஸ் . அஹமட் ஸஹிட் அவர்களுடன் அல்ஹாஜ் மௌலவி உபைதுல்லாஹ், அல்ஹாஜ் எஸ் . எச் .எம் நஸார் மற்றும் அல்ஹாஜ் அஸ்மீர் அலி ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டுப் போட்டியில் மஞ்சள், பச்சை , நீலம் ஆகிய இல்லங்கள் பங்குபற்றின. இதில் பச்சை இல்லம் மூன்றாவது இடத்தையும், மஞ்சள் இல்லம் இரண்டாவது இடத்தையும் , நீல இல்லம் முதலாம் இடத்தையும் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இப் போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிய ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ஏ. எல். எப். ஸுமையா, அக்குறணை-