in ,

கண்டி, அக்குறணை பிரதேசத்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்..

கண்டி மற்றும் அக்குறணை பிரதேசத்து மாணவர்களின் ஆங்கில மொழி மூல பேச்சுத் திறனை விருத்தி செய்வதற்கான 4 மாத பயிற்சிப்பட்டறையை நிறைவு செய்த மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (01.03.2020) கண்டி Trinty கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடபெற்றது.

ஆசிரியர் ஜனாப் பர்வீஸ் இமாமுதீன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி Gateway கல்லூரியின் அதிபர் திரு. க்ளாட்வின் கணகசபை, கெளரவ விருந்தினராக மனநல ஆலோசகர் மற்றும் இயன் மருத்துவருமான Dr. அஜய் ஜயசீலன், விஷேட அதிதியாக அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் உதவி இயக்குனரான Dr. லக்மாலி ரணதுங்க ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இப்பயிற்சிப்பட்டறை கண்டி மற்றும் அக்குறணை பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது. பிள்ளைகளின் பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆளுமைத் திறனை விருத்தி செய்வதற்காகவும் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதுடன் மாணவர்கள் முன்வந்து தமது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டது. சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அனைத்து மாணவர்களும் தமது திறமையை மேடையில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அஸாமியா ஹலீம்தீன், அக்குறணை

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஒலுவில் அல் மத்ரஸதுஷ் ஷாபியாவின் வெற்றிகரமான நிகழ்வு நிறைவு பெற்றது.

அக்குறணை, தெழும்புகஹவத்தை ஆரம்ப பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி.