in

ஒலுவில் அல் மத்ரஸதுஷ் ஷாபியாவின் வெற்றிகரமான நிகழ்வு நிறைவு பெற்றது.

ஒலுவில் அல்- மத்ரஸதுஷ் ஷாபிய்யாவின் 33 வருட நிறைவு விழாவும், மீலாத் தின விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஈசாலெவ்வை ஹில்மி {வாஹிதி} தலைமையில் 29/02/2020 சனிக்கிழமை இடம்பெற்றது.

 இந் நிகழ்வில் அதிதிகளாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், சட்டத்தரணி மன்சூம் மௌலானா, கண் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி (ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று) முஹமட் முபாரிஸ் மற்றும் வைத்தியர் அகமட் ரிஷி , அக்கறைப்பற்று தொழிநூட்பக்கல்லூரியின் பதிவாளர் பியாஸ் இப்றாஹிம், மௌலவி நிசாத் ஷர்க்கிஅக்கரைப்பற்று நூருல் இர்பான் அரபுக் கலாசாலையின் மௌலவி நிசாத் (ஷர்க்கி), மௌலவி பாரிஸ் பாகவி, மௌலவி நழீம் ஷர்க்கி , முன்நாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி றியாஸ் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் மத்ரஸா மாணவ , மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஆதிக், ஒலுவில்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஹபுகஸ்தலாவ மின்ஹாஜ் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்…

கண்டி, அக்குறணை பிரதேசத்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்..