in

அக்குறணைஅஸ்ஹர் ஆரம்பப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்…..

கண்டி மாவட்டம், கடுகஸ்தோட்டை வலயத்திற்குட்பட்ட  அஸ்ஹர்  ஆரம்ப பாடசாலையின்  2020  ஆம்  ஆண்டிற்கான  இல்ல  விளையாட்டு போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை  ( 25.02.2020 ) அஸ்ஹர்  மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுகள் அதிபர் எஸ். ஏ. எப்  ஜிம்னாஸ்  அவர்களின் தலைமையில் இடம்பெற பிரதம  அதிதியாக “நிப்போன் ” குழுமத்தின்  முகாமையாளரும்  “அஸதா ”  நிர்வாக அமைப்பின்  போஷகருமான  அல்ஹாஜ்  டி. எஸ் . எம் .எம்   நிசைஹார் அவர்களும் , கௌரவ அதிதியாக  கடுகஸ்தோட்ட வலய ( தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான ) உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்  எம் . எஸ் . எம்  ராஸிக்  அவர்களும், (“பைஸோர்  மோட்டர்ஸ்”)  பங்காளரான  ஜனாப்  எப் . எம். பாஸில்  அவர்களோடு  ஏனைய பாடசாலை அதிபர்களான  ஜனாப் ரிழ்வான் ( அக்குறணை ஸாஹிரா பாடசாலை),   ஜனாபா  ரிஹானா  செய்ன் ( அக்குறணை பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயம் ) , பதியுத்தீன் மகளிர் பாடசாலை பிரதி அதிபர்   ஜனாபா    ஸூலைஹா  மற்றும் ஜனாபா எஸ் .எம் ரொஸான் பேகம்  அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

நடைபெற்ற இவ்வில்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளின்  முடிவாக  “ஓர்க்கிட்” இல்லம் முதலாவது இடத்தையும்  , “ரோசா” இல்லம் இரண்டாம் இடத்தையும் , “தாமரை” இல்லம்  மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்வில்  பாடசாலை அதிபர்,  ஆசிரிய ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய  மாணவர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள் , செயலாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து  சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

A. L. F ஸூமையா, அக்குறணை.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மாத்தளை, உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்….

ஹபுகஸ்தலாவ மின்ஹாஜ் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்…