in ,

மாத்தளை, உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்….

மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட  உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை அதிபர் M. S. M இக்பால் தலைமையில் உக்குவளை S. B யாலேகம மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் முன்னாள் உதவி அதிபர் அல்ஹாஜ் M அய்ன்டீன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மாத்தளை கல்வி வலய துணை இயக்குனர் களான  J. M இக்பால் மற்றும் A. D. A ஹேவாவசம் அவர்களும், மாத்தளை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் M. R ரில்வான் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாத்தளை கல்வி வலய உதவி கல்வி இயக்குனர் மொனிகா கோமஸ், மாத்தளை கல்வி பிரிவு இயக்குனர் P. P மனோஹர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு Jinnah, Jaya, Azeez, மற்றும் Akbar இல்லங்கள் போட்டியிட்டு Jinnah இல்லம் 296 புள்ளிகளையும் Azeez இல்லம் 317 புள்ளிகளையும் Akbar இல்லம் 343 புள்ளிகளையும் Jaya இல்லம் 434 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. மேலதிக 91 புள்ளிகளால் Jaya இல்லம் வெற்றி பெற்றது. இங்கு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பாடசாலையின் பழைய மாணவ, மாணவிகளுக்கு சங்கத்தால் விஷேட பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்ரா முலாபர், மாத்தளை.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மடவளை YMMA கிளையின் ஆசிரியர் தொழில்வாண்மை விருத்திக் கருத்தரங்கு

அக்குறணைஅஸ்ஹர் ஆரம்பப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்…..