மடவளை Y.M.M.A கிளையினால் எற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி சம்மந்தமான கருத்தரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25.02.2020) பிற்பகல் 01. மணி முதல் 3.30 மணி வரை அஷ்ரஃப் கேட்பார் கூடத்தில் ( மதீனா தேசிய பாடசாலை) நடைபெற்றது.
இதில் வளவாளராக வெஸ்வூட் கல்லூரி, லோயல் பெண்கள் கல்லூரியின் பணிப்பாளர் ஜனாப் பாஸிர் மொஹிடீன் MBA (Uk),IAB,(Uk),CIMA கலந்து சிறப்பித்தார். அல் /அக்ஸா முஸ்லிம் வித்தியாலயம் (நுகதெனியா) பாடசாலையின் ஆசிரியர்களும், அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலையின் (மடவளை) ஆசிரியர்களும், மதீனா தேசிய பாடசாலையில் (மடவளை) ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹிஜாஸ் அஹ்மத், மடவளை