சவூதி அரேபிய மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 9வது கலாசார பண்பாட்டுக் கண்காட்சி (STUDENTS CULTURAL FESTIVAL) 2020.02.24 தொடக்கம் 2020.03.09 ம் திகதி வரை மதீனா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
சுமார் 104 நாடுகளின் கலாசார பண்பாட்டு விழுமிய ஆடைகள், சிற்றுண்டி உணவுகள், குடிபானங்கள், மற்றும் தத்தமது நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சங்கள் போன்றவைகள் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இம்மாபெரும் கண்காட்சியில் “இலங்கை நாட்டு மாணவர் ஒன்றியத்தின்” மூலம் எமது நாட்டுக் கலாசார பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் எந்த நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டு கலாசார அம்சங்களை நல்ல முறையில் காட்சிப்படுத்தி, அதிகமான பார்வையாளர்களின் ஆதரவை பெறுகின்றார்களோ
அந்த அடிப்படையிலேயே 1ம், 2ம், 3ம் நிலைகள் வழங்கப்படும் என குறித்த பல்கலைக்கழக மாணவன் ZAKARIYA ABDUL HAADHI இனால் அறியத்தரப்பட்டுள்ளது.
ஆகிலா அஷ்ரப், மாவனெல்ல.