சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்குற்பட்ட லபுக்களை கொண்டகலை பிரதேசத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி விசேட கலைநிகழ்வுகள் அம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும், விசேடமாக மலையக மக்களின் பாரிய பிரச்சினையான கடன் பெறல் தொடர்பான நாடகம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய செய்தியாளர் ம.அகிலேஸ்.