இன்று அதிகாலை (21-02-2020) தம்புள்ளை மாத்தளை ஏ 09 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 பேர் மாத்தளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் நாவுல, தம்புள்ள மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-மாத்தளை அஸீம்-