பாடசாலையின் அதிபர் M.Z .M. மஸீன் அவர்களின் தலைமையில் மாலை 02.00 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக அக்குரணை பிரதேச சபைத் தவிசாளர் அல்ஹாஜ் இஸ்திஹார் இமாமுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு சிறப்பு விருந்தினராக பிரபல தொழில் அதிபரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் H . M .M ரிஸ்வான் அவர்களும் கலந்து கொண்டதோடு பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரான திரு பதுர்தீன் அவர்களும் கலந்து கொண்டார்.
இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் வெற்றிக் கிண்ணத்தை ஜின்னாஹ் இல்லம் தனதாக்கிக் கொண்டது.
நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் , பாடசாலை நிர்வாகக் குழுவினர், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் எனப் பலரும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
நுஹா பர்வீன், அலவதுகொட