Local News

கட்டுகஸ்தோட்டை ஸாஹிராக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று…

கண்டி கல்வி வலையத்திற்குற்பட்ட கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் கெளரவ அதிபர் ஜனாப் எ.எச். கலீலுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இன்று  (2020.02.20) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. எம்.டபிள்யூ. விஜயரத்ன அவர்களும், கெளரவ விருந்தினராக தமிழ் மொழிப் பிரிவிற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. எ. ஜயப்பிரகாஷ் அவர்களும் , விஷேட அதிதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. எ.ஆர்.எம். அமீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இல்ல விளையாட்டுப் போட்டியில் ஸப்ரா, ஹல்ரா, ஹம்ரா ஆகிய இல்லங்கள் பங்குபற்றியது. அதில் ஹம்ரா இல்லம் 3ஆம் இடத்தையும், ஹல்ரா இல்லம் 2ஆம் இடத்தையும், ஸப்ரா  இல்லம் 1ஆம் இடத்தை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இவ்விளையாட்டுப் போட்டியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸாமியா ஹலீம்தீன், அக்குறணை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button