in ,

மாத்தளை ஸாஹிராவில் ஜாயா இல்லம் வெற்றியை சுவீகரித்தது.

மாத்தளை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் கெளரவ அதிபர் ஜனாப் சித்தீக் நஜீன் தலைமையில் நேற்று (2020.02.15) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக KOT Engineering PVT LTD. நிறுவனண்ின் பணிப்பாளர் பொறியியலாளர். எம். ஷிப்லி பாரூக் (B.sc) கலந்து சிறப்பித்ததோடு கௌரவ விருந்தினராக ஜனாப் எம். சி.  சஹீர் அஹமத்
(Entrepreneur CASONS Rent a Car ) சிறப்பு விருந்தினராக M Way PVT LTD. நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மஸாக்கீன் எம் முஈன் உம், விஷேட அதிதியாக மாத்தளை வலயக் கல்விப் பணிமனையின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்
அல்ஹாஜ்  எம். ஆர். யூ ரில்வான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

போட்டியில் ஜாயா, இக்பால், அஸாட், ஜின்னாஹ் ஆகிய இல்லங்கள் பங்குபற்றிய இதேவேளை போட்டியில் ஜாயா இல்லம்  முதலாம் இடத்தைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இவ்விளையாட்டு போட்டியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மாத்தளை அஸீம்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அக்குறணை பாலிகா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று.

பலாங்கொடை அல் மினாராவில் தரம் 03 மாணவர்களது நல்லிணக்க நிகழ்வு