கண்டி மாவட்டம் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அக்குறனை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை(13.02.2019) பாடசாலை அதிபர் திருமதி ரிஹானா தலைமையில் அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்நாள் குவைத் நாட்டிற்கான இலங்கை தூதுவர் S.A.C Mohamed Zuhyle அவர்களும் கௌரவ அதிதியாக கட்டுகஸ்தோட்டை கல்வி வலய தமிழ்ப்பிரவுப் பணிப்பாளர் M.S.M Razik அவர்களும் விஷேட அதிதியாக 2016 ஆண்டின் மகளிருக்கான உலக செம்பியன் செல்வி Zainab அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு அரபா இல்லம் , ஸபா இல்லம் , மர்வா இல்லம் ஆகிய இல்லங்கள் போட்டியிட்டு மர்வா இல்லம் 3ம் இடத்தையும் ஸபா இல்லம் 2ம் இடத்தையும் அரபா இல்லம் 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்ட இதேவேளை இந்நிகழ்விற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பூரண உத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Fazooha Dawood, Akurana-