அ/நெல்லியகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் (2020/02/11) ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். ரசீது தலைமை தாங்க விஷேட அதிதியாக பலாகல கோட்டக் கல்விப் பணிப்பாளர் A.G.L.S. ரணசிங்ஹ அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வை சிறப்பிக்க ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், சமூக நலன் புரிச்சங்கம், பழைய மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கொரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-முஆத் மர்சூக்-