in ,

அக்குறணை குருந்துகஹஎல மு.வி. இல்ல விளையாட்டுப் போட்டியில்….

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குற்பட்ட அக்குறணை குருந்து கஹ-எல முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை கெளரவ அதிபர் திருமதி எ.எஸ். நிஸ்ரியா தலைமையில்  (2020.02.10) கடந்த திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக Bayshore motors நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் எப்.எம். பாஸில் அவர்களும், கெளரவ அதிதியாக கட்டுகஸ்தோட்டை கல்வி வலய தமிழ் மொழி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எஸ்.எம். ராஸிக் அவர்களும், சிறப்பு விருந்தினராக அநுராதபுரம் Omega Steel  (pvt) Ltd. நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எ. பாய்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் ஷம்ஸ், கமர், நஜ்ம் ஆகிய இல்லங்கள் பங்குபற்றியது. இதில்  கமர் இல்லம்  முதலாம் இடத்தையும், ஷம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜ்ம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இவ்விளையாட்டு போட்டியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிதிகளுக்கு பாடசாலை அதிபரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

-அஸ்ரா பின்த் ஹலீம்தீன், அக்குறணை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் வலய அதிபர்களுக்கான பொதுக்கூட்டம் இன்று.

நெல்லியகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் இல்ல விளையாட்டுப் போட்டி.