in

அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் வலய அதிபர்களுக்கான பொதுக்கூட்டம் இன்று.

அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிமனையின் 2020 ம் ஆண்டுக்கான இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை (2020.02.12) வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் அஷ்ஷேக் ரஹ்மதுல்லாஹ் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வலயக்கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் உட்பட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் கோட்ட பாடசாலை அதிபர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2020 ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக முறையான தெளிவூட்டல் ஆரம்பத்தில் அதிபர்களுக்கு வழங்கப்பட்டது. முறையான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதோடு, கல்வியில் மிகப்பெரிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பாடசாலை அதிபர்கள் செயற்பட வேண்டும் எனவும் தெளிவு படுத்தினார். டெங்கு நோய் தொடர்பில் அதிகூடிய கவனம் பாடசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். கல்வி அமைச்சு மூலம் வழங்கப்படுகின்ற சுற்றறிக்கைகளைப் பயன்படுத்தி பாடசாலையின் கல்வி, அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை முழுமையாக பின்பற்றி நல்லொழுக்கமுள்ள புத்திஜீவிகளை நாம் சமூகத்திலிருந்து உருவாக்க முயற்சி செய்வோம் என உறுதி பகர்ந்தார்.

இதேவேளை கடைசியாக வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை 09 வது இடத்திலிருந்த கிழக்கு மாகாணம் 04 வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இதற்கு உதவியாக இருந்த சகல பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் தான் மாகாணம் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் நினைவூட்டல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சப்ராஸ் அபூபக்கர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அக்குறணை அஸ்ஹர் இல்ல விளையாட்டுப் போட்டியில்……

அக்குறணை குருந்துகஹஎல மு.வி. இல்ல விளையாட்டுப் போட்டியில்….