in

அக்குறணை அஸ்ஹர் இல்ல விளையாட்டுப் போட்டியில்……

கண்டி மாவட்டம், கடுகஸ்தோட்டை  கல்வி வலய  அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியின்  2020  ஆம் ஆண்டிற்கான  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை  ( 2020 . 02. 11)   பாடசாலையின்  அதிபர் திரு  A. L  அன்வர்  தலைமையில் பாடசாலை மைதானத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வின்  தலைமை  விருந்தினராக  கடுகஸ்தோட்டை கல்விப் பொறுப்பாளர் நாயகம்  திருமதி சன்ட ரேகா குலதுங்க கலந்து சிறப்பித்தார்.
கௌரவ  விருந்தினராக  கடுகஸ்தோட்ட கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவு கல்விப்பணிப்பாளர்  திரு  M.S.M. ராஸிக்,  மற்றும் வெஸ்வுட் பாடசாலையின் பிரதி அதிபர் திரு  A. L. M ஷியாம் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர்களாக  கடுகஸ்தோட்டை சுகாதார நல கல்விப் பொறுப்பாளர்  திரு   P.W .A.R.S.I சில்வா , திரு  M.N.M டில்சாட்         ( 11-19  இலங்கை கிரிக்கெட் குழு) ,    திரு ஆஸீர் ரமீஸ் ( வலைப் பந்தாட்ட தேசிய மட்ட வீரர்) திரு M.A.M அஸ்லம் ( பாடசாலை முன்நாள் வலைய மட்ட வீரர் ) ஆகியோரும்  கலந்து சிறப்பித்தனர் .

நடைபெற்ற  நிகழ்வுகளில்  Greens  இல்லம் முதலாவது  இடத்தையும்  Blues  இல்லம்  இரண்டாவது இடத்தையும்  Yellows   இல்லம்  மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில்  ஆசிரிய ஆசியர்களும், மாணவர்களும், மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டதோடு பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு ,  பாடசாலை நிர்வாகக் குழு ஆகியன இணைந்து பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-நுஹா பர்வின், அலவதுகொட-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புஸல்லாவ, சரஸ்வதி மத்திய கல்லூரியிலும் இல்ல விளையாட்டுப்போட்டி

அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் வலய அதிபர்களுக்கான பொதுக்கூட்டம் இன்று.